இந்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து, திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
இந்தியா - கர்நாடக மாநிலம் மங்களூரு, கண்ணூர் தேசிய நெடுஞ்சாலை 73 அருகே உள்ள ஷா மைதானத்தில் ‘உலமா ஒருங்கிணைப்பு கர்நாடகா’ அமைப்பின் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து லட்சக்கணக்கானோர் திரண்ட ஒரு பெரிய போராட்டம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (18) தொழுகைக்குப் பிறகு இந்த போராட்டம் நடைபெற்றது.
வீடுகளின் கூரைகள் மற்றும் மரங்களின் உச்சியில் இருந்து மூவர்ண தேசிய கொடிகள் பறக்க, "அல்லாஹு அக்பர்" மற்றும் "ஆசாதி" என்ற கோஷங்கள் எதிரொலித்தன.
"வக்ஃபு திருத்தச் சட்டத்தை நிராகரி", "வக்ஃபை அரசியல்படுத்துவதை நிறுத்து" என்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.







Post a Comment