நுவரெலியாவில் வெள்ளப்பெருக்கு
நுவரெலியாவில் இன்று (28) பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தாழ்நிலப் பகுதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரதான வீதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால், பல மணி நேரங்களுக்கு போக்குவரத்து முற்றாக தடைபட்டது.

Post a Comment