Header Ads



ஹவுத்திகளின் ஏவுகணைகள் இஸ்ரேலிய படையினரால் வெற்றிகரமாக செயலிழப்பு - இலங்கைத் தூதரகம் அறிக்கை


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.


இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இன்று (18) காலை ஏமனில் ஹவுத்தி பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால், ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


அதன்படி, நாளை (19) முதல் 26 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

No comments

Powered by Blogger.