பலஸ்தீன் இனப் படுகொலைக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
- இஸ்மதுல் றஹுமான் -
பாலஸ்தீன மக்களுக்கு எமது ஆதரவு எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு "கிதுசர" குழுவினர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று 18 ம் திகதி காலை நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.
இங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலஸ்தீனில் இடம்பெறும் குழந்தை மற்றும் இனப்படுகொலைகளை உடன் நிறுத்து, பாலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, அன்று முல்லிவைக்கால் இன்று பலஸ்தீன் காஸா, இஸ்ரேலிய தலைவர்கள் இன்று பலஸ்தீனில் இயேஸுவை கொலை செய்கின்றனர், இஸ்ரேல்- அமெரிக்க அராஜகத்தை உடன் நிறுத்து போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.

Post a Comment