Header Ads



3 கோடி ரூபா பெறுமதியான 228 தொலைபேசிகள், கணினிகளை விட்டுச்சென்ற கடத்தல்காரர்


3 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.


துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபரொருவர் இந்த இரண்டு பயணப்பொதிகளையும் விமான நிலைத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளதாக என விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.