Header Ads



உணவருந்த சென்றவர்கள் மீது தாக்குதல் - 11 பேருக்கு விளக்கமறியல்


காலியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் உணவருந்த சென்ற சிலரை தாக்கிய சந்தேகத்தில் அந்த ஹோட்டலின் 11 ஊழியர்களை கைதுசெய்து எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


புதன்கிழமை (16) இரவு உணவு பெற்றுக்கொள்வது தொடர்பாக உணவக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. 


கொழும்பைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரும் 14 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் இத் தாக்குதலில் காயமடைந்ததில் காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விசாரணைகளைத் தொடர்ந்து தாக்குதலுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ததோடு, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.