முஸ்லிம் வைத்தியரை கொழும்பில் மேயர் வேட்பாளராக களமிறக்கும் SJB
- Anzir -
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ள நிலையில், கொழும்பு மாநகர சபை வசப்படுத்தும் போட்டியும் பிரதன கட்சிகளிடையே உச்சம் பெற்றுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக, முஸ்லிம் வைத்தியர் ஒருவரை களமிறக்க உள்ளதாக Jaffna Muslim இணையத்திற்கு மிக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நேரடி சிபாரிசில் குறித்த முஸ்லிம் வைத்தியர் போட்டியிடவுள்ளார். இதற்கு மனோ கனேசன் உள்ளிட்டவர்களும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அறியக் கிடைத்தது.
அதேவேளை மற்றுமொரு முக்கிய பிரமுகரான ஒமர் காமிலையும் களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அது பயனளிக்கவில்லை.
அத்துடன் எரான் விக்ரமரத்ன, ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பெயர்களும் மேயர் வேட்பாளர் பதவிக்கு முன்னர் பிரேரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment