இந்துக்களுக்காக திறந்து விடப்பட்ட பள்ளிவாசல்கள்
திருவனந்தபுரம் மாநகர எல்லையில் ஐந்து கி.மீ சுற்றளவில் அனைத்து சாலைகளிலும் அடுப்பு வைத்து பொங்கல் வழிபாடு நடத்தினர்...
இந்த ஐந்து கி.மீ சுற்றளவில்
பத்து ஜும்மா மசூதிகள் அமைந்துள்ளது.
மணக்காடு வலியபள்ளி
மணக்காடு தைக்காபள்ளி
பாளையம் ஜும்மாபள்ளி
அட்டகுளங்கரை ஜும்மா பள்ளி
சாலைபஜார் ஜும்மா பள்ளி
கருப்பட்டிகடை ஜும்மா பள்ளி
தம்பானூர் ஜும்மா பள்ளி
கரமனை ஜும்மா பள்ளி
கொஞ்சிறவிளை மர்க்கஸ்
கமலேஸ்வரம் மர்க்கஸ்
மணக்காடு தவ்ஹீத் மர்க்கஸ் உட்பட இந்த எந்த மசூதியிலும் எந்தவித பாதிப்புமில்லாமல் தொழுகை நடந்தது. தார்ப்பாய் போட்டு மூடவுமில்லை.
நேற்று மாலை முதல் வந்து பொங்கல் வழிபாடு நடத்த இடம்பிடித்தவர்களில் நூற்றுக்கணக்கான சகோதரிகள் பள்ளிவாசல் அருகில் தங்களின் இடத்தை உறுதி செய்து மசூதியின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்தனர்..
பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடத்த பள்ளிவாசல் தண்ணீரை பயன்படுத்தியவர்கள் அதிகளவில் உண்டு.. தாங்கள் பல வருடங்களாக பள்ளியில் வந்து தங்கி பொங்கல் வழிபாடு நடத்துவதாக ஏராளம் சகோதரிகள் கூறுகின்றனர்.
மணக்காடு, பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள் குடிநீர் வசதிகளுடன், இந்து சகோதரிகள் தங்கி ஓய்வெடுக்க, கழிப்பறை பயன்படுத்த, சமையல் பொருட்கள் பாதுகாக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்..
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மணக்காடு பகுதியை சுற்றியுள்ள பல முஸ்லிம்களின் வீட்டு வளாகத்தில் கூட இந்து சகோதரிகள் ஓய்வெடுக்க, பொங்கல் வைக்க தேவையான தண்ணீர் உட்பட உதவியாக இருந்துள்ளனர்..
மணக்காடு வலியபள்ளி ஜமாஅத் வளாகத்தில் பத்து நாட்களுக்கும் காவல் கட்டுப்பாடு அறை, தீயணைப்பு வாகனம் நிறுத்த வசதிகள், ஆம்புலன்ஸ் நிறுத்த வசதிகள் செய்து கொடுத்திருந்தனர்..
நோன்பு துறக்கும் நேரத்தில் பணியிலிருந்த காவலர்கள் தயங்காமல் வந்து நோன்பு கஞ்சி அருந்தி சென்றதும் உண்டு...
மதம் என்பது மனிதனை அடையாளப்படுத்தும் ஒரு காரணியே அடித்து சாவதற்கு அல்ல என்பதை சங்க பரிவாரங்களின் சாமியார் பரிவாரங்களுக்கு புரியாதது ஏனோ?
Colachel Azheem
Post a Comment