SLBC இஸ்லாமிய சேவை, மீண்டும் ஒரு மணித்தியாலமாகிறது
- Anzir -
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபான இஸ்லாமிய சேவை முக்கால் மணித்தியாலமாக குறைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு மணித்தியாலமாக, ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், மேல் மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட, மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளருடன் உரையாடி, விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் வழமை போன்று, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபான இஸ்லாமிய சேவை நிகழ்ச்சிகளை தொடர, உரியவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மீண்டும் ஒரு மணித்தியாலமாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபான இஸ்லாமிய சேவை ஒலிக்கவுள்ளது.

Post a Comment