போதைப்பொருள் பாவனையாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படும் மருந்து பிடிபட்டது
போதைப்பொருள் பாவனையாளர்களால் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்படும் மருந்து வகையான Pregabalin என்ற மருந்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற 30 வயதுடைய ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு கொப்பற சந்தியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
500,000 Pregabalin காப்ஸ்யூல்கள் உரிமம் அல்லது அனுமதி இல்லாமல் போதைப்பொருளைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு வேனில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றினர். சந்தேக நபரின் விநியோக வலையமைப்பு மற்றும் விநியோக வழிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
.jpg)
Post a Comment