"சூழ்ச்சியாளர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் அல்லாஹ்"
சந்தீப் வாரியார்,, மூன்று மாதங்கள் முன்பு வரை சங்க பரிவாரங்களின் செய்தி தொடர்பாளர்.
ஆர்.எஸ்.எஸ் சின் கேரள முகம்..
மலையாள டிவி விவாதங்களில் வலதுசாரி எனும் அடையாளத்துடன் தினமும் வந்தமர்ந்து முஸ்லிம் விரோத இஸ்லாமோபோஃபியா வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர்..
சமீபத்தில் நடந்து முடிந்த பாலக்காடு இடைத்தேர்தலில் பாஜக தனக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்த்த சந்தீப் வாரியாருக்கு சீட் மறுத்ததன் காரணமாக காங்கிரஸில் இணைந்து சங்க பரிவாரங்களுக்கு எதிராக புதிய பயணத்தை தொடங்கியவர்..
நேற்றைய தினம் தனது சொந்த ஊர் பாலக்காடு மாவட்டம் சேதல்லூர் அருகில் தச்சநாடுகரையில் ஆயிரம் பேருக்கு மேலானவர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்..
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், முஸ்லிம் லீக் கட்சியின் பாணக்காடு அப்பாஸ் அலி ஷிகாப் தங்கள் உட்பட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட இஃப்தார் நிகழ்வில் கேரளாவில் இஸ்லாமோபோஃபியா வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்த மற்றொரு பிரமுகரான ராகுல் ஈஸ்வரும் கலந்து கொண்டு ரமலான் மாதம் சகோதரத்துவமும் இணக்கமும் வெளிப்படுத்தும் மாதம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த நிகழ்வுகளை உற்றுநோக்கும் போது "சூழ்ச்சியாளர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் அல்லாஹ்" எனும் திருமறை வசனங்கள் நினைவுக்கு வருகிறது.
Colachel Azheem
(இது ஒரு தகவல் பகிர்வு மட்டுமே)
Post a Comment