Header Ads



சாமியார் யோகியின் ஆட்சியும், நியூயார்க் நகரில் தொழுகைக்காக திரளும் பல்லாயிரம் முஸ்லிம்களும்

 
இந்தியா - உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  
வருகிற வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை வீட்டிலேயே தொழுது கொள்ளலாம் அல்லது  மதியம் 2 மணிக்கு பிறகு பள்ளிவாசல்களில் ஜும்மா தொழ வேண்டும் என்று சர்ச்சைக்குரிய முறையில் அறிவிப்பு செய்துள்ளனர் சாமியார் யோகியின் அரசாங்கம்.


ஆனால் முஸ்லிம் வெறுப்பை வாழ்நாள் முழுவதும் சுமந்து நடக்கும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் உலகப்புகழ் பெற்ற (Times Square) டைம்ஸ் சதுக்கத்தில் ரமலான் மாதம் தராவீஹ் தொழுகைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.


நியூயார்க் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தின் ஒரு பகுதியில் ஆண்டு தோறும் ரமலான் மாதம் சிறப்பு தொழுகை நடந்து வந்தாலும் இந்த வருடம் நாள்தோறும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பல்லாயிரம் பேர் தராவீஹ் தொழுகைக்கு வருவதால் டைம்ஸ் சதுக்கம் பகுதி நிறைந்து வீதிகளில் அணிவகுத்து தொழுகை நடத்த நியூயார்க் நகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது ஊடகங்கள் தலைப்பு செய்தியில் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவில் ஏகத்துவ எழுச்சியை பார்க்க முடிகிறது.


Colachel Azheem

No comments

Powered by Blogger.