Header Ads



"நாட்டு மக்கள் கவலைப்பட எந்த காரணமும் இல்லை"


எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே விலகியிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். 


இன்று (1) நடைபெற்ற விசேட ஊடகவிலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


இன்று (1) காலை 7 மணி நிலவரப்படி பணம் செலுத்தப்பட்ட 2,924 முன்பதிவுகளுக்கான எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் தலைவர் கூறியுள்ளார். 


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த டி. ஜே.ராஜகருணா, 


"இன்று வரை, CPC-யிடம் 1696 லோடுகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் IOC-யிடம் 471ம், சினோபெக்கியிடம் 391ம், RM பார்க்கிலிருந்து 366ம். அதாவது இன்று 2924 லோடுகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வழக்கம் போல் விநியோகம் இடம்பெறுகின்றன்


கொலன்னாவைக்கு சுமார் 140 பவுசர்கள் வந்திருந்தன. அவற்றில் 60க்கும் மேற்பட்டவை வெளியேறிவிட்டன. நாட்டில் வழமைப்போல் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றன. 


ஒரே ஒரு குழு மட்டுமே விநியோகத்திலிருந்து விலகியுள்ளது. நேற்று (28) இரவு முதல் எரிபொருள் முன்பதிவு செய்யப்படவில்லை என அவர்கள் கூறினர். ஆனால் இன்று காலை 7 மணி வரை, அவர்கள் முன்பதிவு செய்தவையே அவை. 


இதனை எடுத்துக்கொண்டால், நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட எக்காரணமும் இல்லை. "நாட்டு மக்கள் கவலைப்பட எந்த காரணமும் இல்லை" என்று அவர் கூறினார். 


இதற்கிடையில், இன்று காலை கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எரிபொருள் முனையங்களில் இருந்து பவுசர்கள் வெளியேறுவதைக் காண முடிந்தது.

No comments

Powered by Blogger.