முக்கிய நாடுகளை வீழ்த்தி, முதலிடம் பிடித்த இலங்கை
2025 ஆம் ஆண்டில் குடும்பங்கள் இடம்பெயர சிறந்த நாடாக இலங்கை திகழ்வதாக கான்டே நாஸ்ட் டிராவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வி முறைக்கு (1.0 இல் 0.7) ஈர்க்கக்கூடிய மதிப்பெண்ணையும், ஆண்டுக்கு $354.60 என்ற குறைந்த வருடாந்த குழந்தை பராமரிப்பு செலவையும் (அமெரிக்காவில் $16,439.40 உடன் ஒப்பிடும்போது, இது 10 வது இடத்தில் உள்ளது) பெற்றுக் கொண்டுள்ளது.
வரவேற்கும் தன்மை, வெளிப்புற செயல்பாடுகள் காணப்படுகின்றமை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற இலங்கை ஹோட்டல்கள் காணப்படுகின்றமை போன்ற காரணிகளினால் இலங்கை இந்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் இலங்கை மிக உயர்ந்த இடத்தைப் பிடித்ததில் ஆச்சரியமில்லை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மாறுபட்ட தலைமுறையினர் பெரிய பயணங்களுக்குச் செல்லக் கூடிய இடங்களில் ஒன்றாக இலங்கையை பெயரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆச்சரியமிக்க வனவிலங்குகளின் உறைவிடமாகும் எனவும் அதில் பரந்த தேசிய பூங்காக்கள் மற்றும் பரந்த கடற்கரைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்கவர் வரலாறு, புத்தாக்கம் மிக்க கடற்கரைகள், சுவையான உணவு மற்றும் சிறந்த ஷாப்பிங் காட்சி ஆகியவை உள்ளன," என குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான குடும்பங்கள் பயணம் செய்ய மிகவும் உசிதமான நாடுகளின் பட்டியல் வருமாறு
1. இலங்கை
2. ஸ்வீடன்
3. நோர்வே
4. நியூசிலாந்து
5. ஐஸ்லாந்து
6. ஜெர்மனி
7. பின்லாந்து
8. டென்மார்க்
9. ஆஸ்திரேலியா
10. அமெரிக்கா
Post a Comment