Header Ads



வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் வன்புணர்வு - குற்றவாளியை பிடிக்க களத்தில் 5 பொலிஸ் குழுக்கள்


அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன்  தொடர்புடைய நபரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


முன்னதாக கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுராதபுரம் வைத்தியசாலையில், திங்கட்கிழமை (10) இரவு கடமையில் இருந்த பெண் வைத்தியரை கத்தியை காண்பித்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்றார்.


இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றுவோர், வேலைநிறுத்த போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.