Header Ads



சவுதி - இலங்கை உறவுகளுக்கு 50 வயது, தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கத்தானி தலைமையில் கொழும்பில் நிகழ்வு


சவுதி அரேபியா மற்றும் இலங்கை குடியரசுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கத்தானி தலைமையில் உத்தியோகபூர்வ வைபவம் நேற்று நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்களும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் துணை அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களும், ஏனைய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் உட்பட இலங்கைக்கான பிற நாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஊடகத் துறை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.









No comments

Powered by Blogger.