Header Ads



20 ஆம் திகதிவரை சஜித்திற்கு காலக்கெடு


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.


ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த மேற்கண்ட முடிவை,   சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமைப்பாளர்களுக்கான நியமன நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன அறிவித்தார்.

No comments

Powered by Blogger.