Header Ads



20 வயது கனேடிய மாணவி, 17 கிலோ போதைப்பொருளுடன் கட்டுநாயக்காவில் பிடிப்பு


 கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர்  கனேடிய இளங்கலை பட்டம் பெறவிருக்கும் 20 வயதுடைய மாணவி என்பதோடு, இவர் இலங்கைக்கு வருகைதரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 


அவர் கனடாவின் டொராண்டோவிலிருந்து இந்த போதைப்பொருளுடன் அபுதாபிக்கு வந்திருந்தார். அங்கிருந்து, இரவு 8.35 மணிக்கு எதிஹாட் எயார்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 


அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் 3 போர்வைகளில் சுற்றப்பட்ட 17 கிலோ கிராம் 573 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 


இளம் பெண்ணும் அவர் கொண்டு வந்த போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.