Header Ads



13 நாட்களாக தலைமறைவு - கண்ட இடத்தில் கைதுசெய்ய உத்தரவு


கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, செவ்வாய்க்கிழமை (11)  பிறப்பித்துள்ளார்.


குற்றப் புலனாய்வுத் துறை இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அறிக்கையை தாக்கல் செய்து, சந்தேக நபரான ஐ.ஜி.பி-யைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியது.


வெலிகம பெலேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன், பத்து இடங்களில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடுதலாக, மேலும் 18 இடங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.