Header Ads



மஞ்சிக்கடை சந்தி விபத்தில் 12 பேர் காயம்


கொழும்பு - குருநாகல் வீதி,  நால்ல மஞ்சிக்கடை சந்திக்கு அருகில் திங்கட்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 12  பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 காயமடைந்தவர்கள் தம்பதெனிய மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பாடசாலை மாணவர்கள் மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.  


 குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ. போ .ச பேருந்தும், மணல் சலவை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற வாகனமொன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


பேருந்து மஞ்சிக்கடை சந்தியை கடந்து  பயணிக்கும் போது  ​​முன்னால் வந்த வாகனத்தின் பின்புறம், பேருந்து மீது மோதியுள்ளது. இந்நிலையில் அதில் இருந்த  இயந்திரம் கவிழ்ந்து பேருந்தின் முன்பக்கத்தில் மோதியதாகவும், இதனால் பேருந்து அருகில் உள்ள ஓடையில் விழுந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.