Header Ads



03-03-1924 இதுபோன்ற ஒரு தினத்தில்தான்


(1924 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ம் திகதி) இதுபோன்ற ஒரு தினத்தில்தான் துர்கி நாட்டில் 6 நூற்றாண்டுகளாக தொடர்ந்துவந்த உத்மானிய கிலாபா பேரரசு சதிகார  சக்திகளின் உதவியால் பூண்டோடு ஒழிக்கப்பட்டது. 


இந்த பேரவலம் நடந்தும் கூட, துரதிருஷ்டவசமாக எந்த ஒரு  முஸ்லீம் நாடும், அல்லது எந்த ஒரு அரபு நாடும் மீண்டும் இந்த கிலாபா ஆட்சி முறையை தங்கள் நாடுகளில் மீள்கட்டியெழுப்பவோ அல்லது அதற்கான அழைப்புகள்  விடுக்கவோ எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனை தரும் ஒரு செய்தியாகும். 


துருக்கியைப் பொறுத்தவரை, முஸ்லிம் உலகின் சர்வதேச அரசியல் பலமாக இருந்து வந்த உத்மானிய கிலாபா பேரரசானது,சர்வாதிகாரி அட்டதுர்க்கினால் அங்கே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 


அவனைப் பொறுத்தவரையில் துருக்கிக்கு வெளியே அவனுக்கு எந்த செல்வாக்கும் இருக்கவில்லை. இதன் அர்த்தம், மற்ற ஏதாவது ஒரு நாடு முன்வந்து அந்த பாரம்பரிய அரசியல் செல்வாக்கை தக்க வைக்க முயற்சிகள் எடுத்திருக்கலாம். 


ஆனால் இப்போது, முஸ்லிம் உலகை பல நூற்றாண்டுகளாக பிரதிநிதிப்படுத்திவந்த, அந்த பாரம்பரிய ஆட்சி முறைமை வீழ்ச்சி கண்டு ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில் அவ்வாறான அல்லது அதற்கு நிகரான ஒரு பலமாக அரசியல் சக்தியை நிறுவுவதில், முஸ்லிம் உலகம் தோல்வி கண்டே வந்துள்ளது. 


ஏறத்தாழ 1291 ஆண்டுகளாக முஸ்லிம் உலகம் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தலைநிமிர்ந்து வாழ வழிவகுத்த இந்த ஆட்சி முறைமையானது,  1924 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு தினத்தில் சர்வாதிகாரி அட்டதுர்க்கினால் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


- Imran Farook-

No comments

Powered by Blogger.