Header Ads



அரிசி தட்டுப்பாட்டிற்கு, நாய்களே காரணம் - ஆளும் தரப்பு Mp




நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,


“இலங்கையில் 10 நபர்களுக்கு ஒரு நாய் காணப்படுகின்றது.


ஒரு சாதாரண மனிதன் உண்ணுகின்ற அரிசியிலும் பார்க்க கூடுதல் அளவான அரிசியைத்தான் நாய்கள் உணவாக உட்கொள்கின்றன.


விமர்சனம் செய்பவர்களுக்கு நாய்கள் வளர்க்காதபடியால் அது சம்பந்தமான அறிவு இருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.