Header Ads



சிறப்பு வேலையாட்களைக் கொண்டுள்ள தேன்குட எறும்புகள்


தேன்குடஎறும்புகள் (Honeypot ants) என்பன தேன் எறும்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சிறப்பு வேலையாட்களைக் கொண்ட எறும்புகளாகும் (ரிப்லெட்கள், பிளெர்கேட்கள் அல்லது சுழல்கள்) இவை இவற்றின் வயிறு பெரிதாக வீங்கும் அளவிற்கு உணவை எடுத்துக்கொள்கின்றன. 


பிற எறும்புகள் உணவுப்பரிமாற்ற செயல்முறை மூலம் வேலைக்கார எறும்புகளிடமிருந்து உணவினைப்பெறுகின்றன. இவை வாழும் லார்டர்களாக செயல்படுகின்றன. தேன்குட எறும்புகள் மைர்மெகோசிசுடசு மற்றும் காம்போனோடசு பேரினங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவை. இவை முதன்முதலில் 1881-ல் என்றி சி. மெக்கூக்கால் ஆவணப்படுத்தப்பட்டன. மேலும் 1908-ல் வில்லியம் மார்டன் வீலரால் விவரிக்கப்பட்டது.


பல பூச்சிகள், குறிப்பாகத் தேனீக்கள் மற்றும் சில குளவிகள், பிற்காலத்தில் பயன்படுத்துவதற்காகத் திரவத்தைச் சேகரித்துச் சேமிக்கின்றன. இருப்பினும், இந்தப் பூச்சிகள் தங்கள் உணவைத் தங்கள் கூட்டில் அல்லது தேனடைகளில் சேமித்து வைக்கின்றன. ஆனால் தேன் எறும்புகள் தங்களுடைய உடல் பகுதிகளையே உணவுச் சேமிப்பிற்காகப் பயன்படுத்துவதில் தனித்தன்மை வாய்ந்தவை. பின்னர் உணவு பற்றாக்குறையாக இருக்கும் போது சக எறும்புகளால் இவைப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தேன் எறும்பின் உடலின் உள்ளே சேமிக்கப்படும் திரவம் தேவைப்படும்போது, வேலையாட்கள் எறும்புகளின் உணர் கொம்புகளைத் தாக்கி, தேன்குட எறும்பின் தீனிப்பையில் சேமித்து வைக்கப்பட்ட திரவத்தை மீளப்பெறச் செய்கிறது.

அ.ஜாகீர் உசேன்



No comments

Powered by Blogger.