Header Ads



முதலில் மனிதர்கள் யாவருடனும், மனிதாபிமானமாக வாழப் பழகுங்கள்...


 நீங்கள் இந்தியா, நேபாள் போன்ற நாடுகளில் பிறந்து வளரும் போது பெரும்பாலும் ஹிந்துவாக இருப்பீர்கள்.


நீங்கள் சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பிறந்து வளரும் போது பெரும்பாலும் பௌத்தராக இருப்பீர்கள்.


நீங்கள் ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் பிறந்து வளரும் போது, பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருப்பீர்கள். 


நீங்கள் அரபு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் பிறந்து வளரும் போது பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பீர்கள். 


நீங்கள் ஈரான் அல்லது தெற்கு ஈராக்கில் பிறந்து வளரும் போது போது பெரும்பாலும் ஷியாக்களாக இருப்பீர்கள்.


நீங்கள் இஸ்ரேலில் பிறந்து வளரும் போது பெரும்பாலும் யூதர்களாக இருப்பீர்கள்.


நீங்கள் இந்த இடங்களில் ஏதேனும் ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளரும் போது நாத்திகர்களாக இருப்பீர்கள். 


இதில்  விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்யும். அதாவது, நீங்கள் எந்த ஊரில் எந்த சுழலில் எந்தக் குடும்பத்தில் பிறந்து வளர்கிறீர்களோ அந்து சூழலின் தாக்கம் பெரும்பாலும் உங்களிடம் இருக்கும். 


உலகில் 4,000 க்கும் மேற்பட்ட மதங்கள், சமயங்கள் மற்றும் கோட்பாட்டு பிரிவுகள்உள்ளன, 


மேலும் அந்த ஒவ்வொறு மதத்தை பின்பற்றும் மதத்தவர்களும் தாங்கள்தான் சரியானவர் என்றும் நம்பி வாழ்கின்றனர். 


பெரும்பாலான மக்கள் பிறந்து வளர்ந்த சூழலின் செல்லமகன்களாகவே வாழ்ந்து மறைகின்றனர். அதில் காணப்படும் நம்பிக்கைகளையும் தாய்ப்பாலாகக் குடித்து வளர்கின்றனர். அதில் காணப்படும் சிந்தனைகளையும் சோத்துப் பிடியாக கவ்விக் கொள்கின்றனர். அவர்களில் பலர் படித்தறிந்து நம்பக்கூடியவர்கள் அல்லர் சிந்தித்துணர்ந்து நடப்பவர்களும் அல்லர். 


ஆதலால் பிறப்பால் கிடைத்த ஒன்றுக்காக நீங்கள் பெருமைப்படாதீர்கள். வெறிபிடித்து அலையாதீர்கள். சிரி பிழை எதுவென்று தேடிப்படிக்கும் சுதந்திரம் பெற்றவர்கள் என்பதை மறக்காதீர்கள்.


இனம் நிறம், ஜாதி மற்றும் மொழி போன்று பிறப்போடு சம்பந்தப்பட்டவைகள் உங்கள் சுயவிருப்பத்துக்கு அப்பாற்பட்டவைகள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 


மதம், சமயம், நம்பிக்கை, மற்றும் கோட்பாடுகள் சார்ந்தவைகள் உங்கள் சுயவிருப்த்துக்கு உட்பட்டவை என்பதைத் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 


முதலில் மனிதம் என்பதை மதிக்கப் பழகுங்கள்.  மனிதர்கள் யாவருடனும் மனிதாபிமானமாக வாழப் பழகுங்கள்.


உங்களை நீங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ளுங்கள், நாங்கள் மட்டும் தான் சிறந்தவவர்கள், நாங்கள் மட்டும் தான் சுவனவாதிகள் என்று பாணியில் மனிதர்களுடன் நடந்து கொள்ளாதீர்கள். நாங்கள் மட்டும் தான் வாழப் பிறந்தவர்கள் என்ற போக்கில் போகாதீர்கள். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.