வாகனம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவலை கூறும் இறக்குமதியாளர்கள் சங்கம்
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இன்று (1) முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மெரென்சிகே இந்தக் கருத்தை வௌியிட்டார்.
அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும்.
"இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது" என்றார்.
உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் விதம் பற்றி மெரென்சிகே விளக்கினார்.
அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.
அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.
இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment