இந்த வைத்தியரும் ஒரு தியாகிதான்
எலும்பியல் மற்றும் புற நரம்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். முஹம்மது தாஹிர், காஸாவில் ஏழு மாத மருத்துவப் பணிக்குப் பிறகு லண்டனுக்குத் திரும்பினார்.
இங்கிலாந்து, லண்டனில் உள்ள விமான நிலையத்தில் காத்திருந்த போது, பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் எதிர்பாராதவிதமாக இஸ்ரேல் சார்பு பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனை எதிர்கொண்டு, டாக்டர் தாஹிரை நேர்காணல் செய்ய வலியுறுத்தினர்.
முதலில் ஜனவரியில் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்த டாக்டர் தாஹிர், சமீபத்திய இஸ்ரேலிய இனப்படுகொலையின் போது நோயாளிகளுடன் தங்கி சிகிச்சை வழங்குவதற்காக, காசாவை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.
தற்போது போர் நிறுத்தத்தை அடுத்து காசாவில் இருந்து வெளியேறியுள்ளார்.
யுத்த நேரங்களில் தமது உயிர்களை பொருட்படுத்தமல் மக்களுக்கு சேவையாற்றும் அத்தனை வைத்தியர்களும் தியாகிகளே.
Post a Comment