Header Ads



சமூக ஊடகங்களில், பிரபலமானவரின் தவறான முடிவு


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 24 வயதான இமாஷி ஹெட்டியாராச்சி என்ற இளம் பெண்ணே இந்த முடிவை எடுத்துள்ளார்.


சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான குறித்த பெண், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வலஸ்முல்ல தயாரத்ன வீதியிலுள்ள வீட்டிலுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு அவரை உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ரிக்ரொக் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான இமாஷி, அதிகளவான விசிறிகளை கொண்ட இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் உயிரை மாய்த்துக் கொள்வது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வான அமையாது எனவும் இவ்வாறான தவறான முடிவுகளை எடுப்பது தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  

No comments

Powered by Blogger.