Header Ads



அரசாங்கம் அடக்குமுறையை முன்னெடுத்துள்ளது, உதாரணங்களோடு விளக்கிய சஜித்


சிறப்புரிமை பிரச்சினையொன்றிற்காக, சபாநாயகருடனும், சபை முதல்வருடனும் மற்றும் ஜனாதிபதி அவர்களுடனும் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் கலந்துரையாடினோம். குறித்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காத காரணத்தினால் தான் இவ்வாறு சபையில் இதனை எழுப்புகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


நிலையியற் கட்டளைகள், சம்பிரதாயங்கள், ஒழுங்குவிதிகள் குறித்து சபாநாயகர் பேசினாலும், இந்த சம்பிரதாய ஒழுங்குகள் இன்று பின்பற்றப்படுவதில்லை. சகல  பாராளுமன்ற உறுப்பினர்களும் Erskine May மற்றும் கவுலன் ஷட்லர் போன்ற விதிகள் மற்றும் மரபுகளைக் கொண்ட புத்தகங்களைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். 


வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களிலும் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். இது பாராளுமன்ற சம்பிரதாயம் அல்ல. முற்போக்காக நடந்து, பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிக்குத் தேவையான பிரதிநிதித்துவ எண்ணிக்கையை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 


தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும்  அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கம்புறுப்பிட்டியிலும் அடக்குமுறையே நடந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூட சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக பேசியதால் அங்கும் அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டது. இந்த அடக்குமுறைப் போக்குக்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.