அர்ச்சுனா தொடர்பில், பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளவை
"அத தெரண" BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கேள்வி - அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமைகளை தொடர்ந்து அனுபவித்து வருகிறார். அவரை கைது செய்தீர்களா? கைது செய்யப்படமாட்டாரா? பயமா?
“பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளோ வழங்கப்படவில்லை. அவர் மிக உயரிய சபையின் உறுப்பினர். அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொலிஸாரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் நல்ல விடயங்களையே பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்கள். எனவே அப்படிச் செயல்படுவது அவருடைய வேலை. இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தை அமல்படுத்துவோம். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் செயல்பாடுகளை எதிர்காலத்தில் பார்க்க முடியும்.”
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதோடு, இது தொடர்பான சி.சி.ரி.வி காணொளிகளும் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment