Header Ads



SJB யின் புதிய மாவட்டத் தலைவர்கள்.


2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(14) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் இந்நியமணக் கடிதங்களை வழங்கி வைத்தார். 


இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன அவர்களும், அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார அவர்களும், புத்தளம் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களும், காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களும், கம்பஹா மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அவர்களும், குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அவர்களும், களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா அவர்களும் நியமிக்கப்பட்டனர். 


ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமணங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன. 


இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் பிரசன்னமாகி இருந்தார்.

No comments

Powered by Blogger.