மனிதமூளையின் நரம்புமண்டல மிக மிக நுட்பமான வலைப்பின்னல்
எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட இப்புகைப்படமானது மனிதனின் பெருமூளையில் காணப்படும் நரம்பு மண்டலத்தில் மிக மிக நுட்பமான வலைப்பின்னலை மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.
மனித மூளையில் அமையப்பெற்றுள்ள அற்புதமான நரம்பியல் நெட்வேர்க்கை எடுத்துக்காட்டும் விதமாக ஒவ்வொரு வகை செல்களும் வெவ்வேறு வண்ணங்களில் வண்ணம் கொடுக்கப்பட்டு உங்கள் முன் இப்புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பெருமூளைப் பகுதியில்தான் சிந்தித்தல், தீர்மானித்தால், நினைவாற்றல் மற்றும் உணர்திறன் போன்ற மிக முக்கியமான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
வியக்கத்தக்க வகையில் செயலாற்றும் இத்தகையதோர் நரம்பியல் நெட்வேர்க் இயங்குவதால்தான் மனிதனானவன் ஆக்கபூர்வமாகவும் அதிசயமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.
மனித மூளையில் 100 டிரில்லியனுக்கும் அதிகமான நரம்பியல் வலைப்பினனல்கள் இருப்பதாக உடற்கூற்றியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment