Header Ads



உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ

 


உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ  தொடருந்து, ஒரு நாளைக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி நாளாந்தம் பயணிக்கும் கலிப்சோ தொடருந்து, கடந்த 17ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியதாகவும், அன்றைய தினம் மாத்திரம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், நாளாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் கலிப்சோ தொடருந்திற்கு, ஒரு நாளைக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபாய் செலவாகிறது.


தற்போது, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர்.


சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிகளைக் காண வாய்ப்பளிக்கும் வகையில், தெமோதர அருகே 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவுப் பாலத்தில் 10 நிமிடங்களும் தொடருந்து நிறுத்தப்படும்.


மேலும் அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டுவதோடு சிறந்த சேவையையும் வழங்க தொடருந்து திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தொடருந்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.