Header Ads



ஆண் சிங்கத்திற்கு மேக்கா என்றும், பெண் சிங்கங்களுக்கு, தாரா, ஆக்ரா, பூமி, அகீரா, எல்சா எனும் பெயர்கள் வைக்கப்பட்டது


அம்பலாந்தோட்டை - ரிதியகம சஃபாரி பூங்காவில் பிறந்து மூன்று மாத காலமாகிய ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா நேற்று (12) நடைபெற்றது.


ஆறு சிங்கக் குட்டிகளுக்காக 4000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதுடன் அதில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு பெயர்களை சூட்டும் நிகழ்வு மிருகக் காட்சி சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. 


அதன்படி ஆண் சிங்கத்திற்கு மேக்கா என்றும், பெண்சிங்கங்கள் ஐந்திற்கும் தாரா, ஆக்ரா, பூமி, அகீரா மற்றும் எல்சா எனும் பெயர்களை வைப்பதற்கு மிருகக்காட்சிச் சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. 


அந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்தவர்களில் மூன்று பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

No comments

Powered by Blogger.