காயங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..
என் அருமை மகனே..!!
நீ போகும் பாதையெல்லாம் முட்களை அகற்றிக் கொண்டிருப்பது என் பணியல்ல.
ஏனெனில், நீ போகும் பாதையெங்கும் முட்கள் முடிவின்றி, எக்கச்சக்கமாக நிறைந்திருக்கும். நானும் உன்கூட காலமெல்லாம் இருக்கவும் முடியாது.
என் பணி என்னவெனில், நீ போகும் பாதையெங்கும் முட்களை தவிப்பது எப்படியென்று, வலிகளை தாங்குவது எப்படியென்று உனக்கு நான் கற்றுத் தருவதாகும்.
நீ விழுந்த பிறகெல்லாம் மீண்டும் திடமனதோடு எப்படி துணிந்தெழ வேண்டும் என்று நான் உனக்கு செல்லித்தருவதாகும்.
காயங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உனக்கு முன்னர் நான் பட்டறிந்துகொண்டேன்.
ஆதலால் கட்டாயம் நீ காயப்பட்டுதான் ஆகவேண்டும். தாங்கும் மனதை நீ உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நீ தனியாகவும் தன்னம்பிக்கையோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்வாய்.
✍ அன்பின் தந்தை
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment