Header Ads



நஸ்ரியா மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் முன்மாதிரி


- இஸ்மதுல் றஹுமான் -


     சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரிக்காக வாங்கப்பட்ட காணியின் உறுதியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம்  25 ம்  திகதி செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.


    நீண்ட காலமாக பாடாசாலையில் நிழவும் இடநெருக்கடியை தீர்ப்பதற்காக பழைய மாணவர் சங்கம் எடுத்த விடா முயற்சியின் காரணமாக கல்லூரிக்கு பக்கத்திலுள்ள 34 பேச்சஸ் காணியை 5 கோடி 50 இலட்சம் ரூபாவுக்கு வாங்கியுள்ளனர்.


     இதற்காக  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாடாசாலையின் பழைய மாணவர்கள், பெற்றார்கள் நலன்விரும்பிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.


    நஸ்ரியா மத்திய கல்லூரி அதிபர் எம்.ஜே.எம். நஸ்மி தலைமையில் நடைபெறும் இவ்வைபவத்தில் சிலாபம் வலய கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரகள்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.