Header Ads



மீனவர்களினால் எதிர்ப்பை சந்தித்த பிரதியமைச்சர்


மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எரிபொருளுக்கு நியாயமான விலை கோரி மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகினார்.


"ஒரு லிட்டர் எரிபொருளை 100 ரூபாய்க்கு வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது, அதன்படி விலை குறைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கடந்த ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகிறோம், ஆனால் எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை, ”என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


எரிபொருள் விலையேற்றம் காரணமாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் மீனவர்களுக்கு பிரதி அமைச்சர் எதுவித பதிலும் வழங்கவில்லை.

No comments

Powered by Blogger.