மதவெறி பரப்புபவர்கள் மத்தியில்..
இந்தியா - கோழிக்கோடு காவல்துறையின் பெறூக் காவல் உதவி ஆணையர் அலுவலக அமெச்சூர் சூப்பிரண்டாக ஹாஜரா பணியாற்றி வருவதோடு கோழிக்கோடு போலீஸ் சொசைட்டி துணைத் தலைவராகவும் உள்ளார். அதே அலுவலகத்தில் துப்புரவு பணியில் தற்காலிக ஊழியராக கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக இந்திராவும் பணியாற்றி வருகிறார்.
இருவரும் அலுவலக பணியில் இருப்பதால் பரஸ்பரம் குடும்ப தகவல்களை பரிமாறுவதுண்டு. 2 பெண் பிள்ளைகளுடன் இந்திரா வாடகை வீட்டில் வசிப்பதும், தற்காலிக துப்புரவு பணியில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்ப செலவுகளுக்கு சிரமம் அனுபவிப்பது ஹாஜராவுக்கு தெரியும்.
ஹாஜராவும் இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மாத சம்பளத்தில் சிறுகசிறுக சேமித்து ஓராண்டு முன்பு தான் சொந்தமாக வீடு கட்டி குடியேறியதால் இந்திராவின் கஷ்டம் புரிந்தது..
அந்த கடனே இதுவரை தீராத நிலையில் இரு பெண் பிள்ளைகளுடன் ஆண் துணையின்றி கஷ்டப்படும் இந்திராவுக்கு எப்படியாவது உதவ வேண்டும் எனும் எண்ணம் நீண்ட நாட்களாக ஹாஜராவுக்கு உண்டு..
அதற்கு முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு சென்று நிலம் இந்திரா பெயரில் நேற்று பத்திரப்பதிவு செய்து வழங்கிய தகவலும் ஹாஜராவின் உதவும் குணமும் கோழிக்கோடு காவல்துறை இணைய பக்கங்களில் வலம் வந்து ஹாஜராவை பாராட்டுகின்றனர்.
விரைவில் அந்த இடத்தில் இந்திரா குடும்பத்துக்கு ஹாஜரா முயற்சியில் புதிய வீடு தயாராகும்..
இந்திராவுக்கு சொந்த வீடு எனும் கனவு நிறைவேறப் போகிறது..
மதவெறி பரப்புபவர்கள் மத்தியில் தான் ஹாஜராக்களும் வாழுகின்றனர்.
Colachel Azheem
www.jaffnamuslim.com

Post a Comment