Header Ads



மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய பொருள்


மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் பாரிய ராங்கி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த ராங்கி இன்று (12) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்தக் கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய ராங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரை சேர்த்துள்ளனர்.


இந்தநிலையில், குறித்த ராங்கியை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அண்மைக்காலமாக இவ்வாறான ராங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.