Header Ads



மகிந்தவுக்கு வீடு வழங்க அன்று, அநுரகுமார ஏகமனதாக இணக்கம் வெளியிட்டார் - ரணில்


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்  இரட்டை நிலைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தற்போது வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்தின் வாடகை மதிப்பீடு இலட்சங்களில் இருப்பதாகவும், அதன் காரணமாக அவர் அதனை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஜனாதிபதி அண்மைக்காலமாக தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.


அதுமாத்திரமன்றி மகிந்த ராஜபக்‌ச தானாக வெளியேறாது போனால் தான் பலவந்தமாக வெளியேற்றப் போவதாகவும் அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.


எனினும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் குறித்த இல்லத்தை மகிந்தவுக்கு வழங்குவதற்கான கலந்துரையாடலின் போது அநுரவும் பங்குபற்றியதாகவும், அவரது சம்மதத்துடனேயே குறித்த வீடு மகிந்தவுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னர் அவருக்கு உத்தியோக பூர்வ இல்லமொன்றை வழங்குது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


அதில் நான், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தோம்.


அதன்போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரமே மகிந்தவுக்கு குறித்த உத்தியோகபூர்வ இல்லம் ஒதுக்கப்பட்டது என்றும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். TW

No comments

Powered by Blogger.