அரசாங்கம் கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்தியதா..? நிராகரிக்கிறார் அமைச்சர்
சேவை ஏற்றுமதிகள் மீதான புதிய 15% வரியை அமுல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி அனைத்து குடிமக்களும் வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், சாதாரண வரி செலுத்துவோருடன் ஒப்பிடும்போது சேவை ஏற்றுமதி வழங்குநர்களுக்கு சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று விளக்கினார்.
இந்தநிலையில், அரசாங்கம் கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் கூற்றுகளை அமைச்சர் ஜெயந்த நிராகரித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்களின் கீழ் சேவை வழங்குநர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment