Header Ads



தற்போதைய அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம்


 ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் உக்ரைனையும்  இலங்கையையும் வித்தியாசமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும் எனவே தற்போதைய அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


"இந்த ஆண்டு செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை அரசாங்கமும் பிற பங்குதாரர்களும் இந்த விடயத்தை இப்போதே மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று நேற்றையதினம்(25) தனது அலுவலகத்தில் தன்னை சந்தித்த இளைஞர்கள் குழுவிடம் குறிப்பிட்டார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


"உலகளாவிய அரசியல் ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யர்கள் தங்கள் நோக்கங்களை வென்றெடுக்க தியாகங்களைச் செய்துள்ளனர். நெப்போலியனை தோற்கடிக்க அவர்கள் தங்கள் மூலதனத்தை எரித்தனர்.


பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறித்து மௌனம் காத்து வருகின்றன. உக்ரைன் தனது ஜனாதிபதித் தேர்தலை நடத்தாதது குறித்து அவர்கள் மௌனம் காத்து வருகின்றனர். 


இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது பொதுத் தேர்தலை ஒத்திவைக்க அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடு செய்கிறது. இருப்பினும், ஜனாதிபதித் தேர்தல் பற்றி அரசியலமைப்பில் எதுவும் கூறப்படவில்லை.


முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து தனது தேர்தலை ஒத்திவைத்தது. இது ஹவுஸ் ஒஃப் கொமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஒஃப் லோர்ட்ஸ் ஆதரவுடன் செய்யப்பட்டது. கொன்சர்வேடிவ், தொழிலாளர் மற்றும் லிபரல் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலை(Winston Churchill) உற்சாகப்படுத்திய பின்னர் அவர் மீண்டும் பிரதமரானார். இங்கிலாந்தில் எழுதப்பட்ட சட்டம் இல்லை, ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.

No comments

Powered by Blogger.