Header Ads



கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர எச்சரிக்கை - கருவும் பாதிக்கப்படும் அபாயம்


நாட்டில் காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என்று சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார்.


மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக் குறைக்க வழிவகுக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பேராதனை மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் ஆகியவை தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறித்து ஆய்வொன்றை நடத்தி வருகிறன.


வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளில் 40% பேர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும் பேராசிரியர் யசரத்னே குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.