Header Ads



இஷாரா செவ்வந்தியைத் தேடி, நாடு முழுவதும் வலைவீச்சு


கணேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தப் பெண் வெளிநாட்டிற்குச் செல்லவில்லை என்றும், நாட்டினுள்ளேயே தலைமறைவாகியுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மத்துகம பகுதிகளில் பல இடங்களில் நேற்று விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.


இருப்பினும், இந்தப் பெண் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறான பின்னணியில், தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறித்த பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர் கொழும்பு ஜெயா மாவத்தையில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.