நேரடிப் பேச்சு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கடந்த காலங்களில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் முன்னோக்கி நகர்த்துவது தொடர்பில் இரு தலைவர்களுக்கும் இடையிலான இறுதித் தீர்மானம் என இரு கட்சிகளின் செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment