Header Ads



கனடா விடயத்தில் டிரம்ப் திடீர் பல்டி - அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா


செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.


சீனா மீதான அமெரிக்காவின் 10% வரி விதிப்பு செவ்வாய்கிழமை காலை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.


சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியை அடுத்து, சீனா பதிலுக்கு அமெரிக்க சரக்குகளுக்கு வரி விதித்துள்ளது.


இதனால் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் பெரிய என்ஜின்கள் கொண்ட கார், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி பாதிக்கப்படும்.


நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மீது 15% வரி விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. அதே போன்று கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள், சரக்கு வாகனங்கள், பெரிய என்ஜின் கொண்ட கார்கள் மீது 10% வரி விதித்துள்ளது.


அரிதாக கிடைக்கப்படும் உலோகப் பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகள் அமெரிக்காவின் வரி விதிப்பு அமலுக்கு வந்த உடனேயே வெளிவந்தன.


இதன் மூலம் பதிலுக்கு பதில் என்ற அணுகுமுறையை சீனா மேற்கொள்ள தயாராக இருக்கிறது என்பது தெரிகிறது. இது பல நிபுணர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், அமெரிக்கா விதித்த வரி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். ஆனால் சீனாவின் வரி விதிப்பு குறிப்பிட்ட சில சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

No comments

Powered by Blogger.