Header Ads



அறியாமைக்கு உதாரணமாக என்னை எடுத்துக்காட்டப்படுகிறதா...?


அரபு இலக்கண மேதை அல்-கிஸாஈ அவர்கள் மாமேதையான வரலாறு. 


அல்-கிஸாஈ அவர்கள் 40 வயது வரை ஆடு மேய்க்கும் இடையனாகவே இருந்துவந்தார்.


ஒரு நாள் அவர் பாதையில் நடந்து செல்லும் போது, ​​​​ஒரு தாய் தனது மகனை படிகக் பள்ளிக்கூடம் போகும் படி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அவனே போகாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். 


அந்த நேரத்தில் அந்தத்தாய்: "மகனே, நீ இப்போது படிக்கப் போகாவிட்டால், பெருக்கும் போது இந்த இடையன்  போன்றுதான் ஆக வேண்டி வரும்" என்றாள். 


உடனே அல்-கிஸாஈ தனது மனதுக்குள்: 'அறியாமைக்கு உதாரணமாக என்னை எடுத்துக்காட்டப்படுகிறதா!" என தனக்குள் ஆதங்கப்பட்டார். 


உடனே சென்ற அவர், ஆடுகளை விற்று, பணத்தை எடுத்துக்கொண்டு படிக்கச் சென்றார். அறிவை தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டார். சொற்ப காலத்தில் இலக்கண உலகில் மேதையாகவும், அரபுப் பாசையில் மொழியியலாளராகவும் மாறினார். 


ஈராக்கின் கூபா நகரில் பிரபலமான அரபு இலக்கண பாசறையின் ஸ்தாபகராகவும் மாறினார். அதனால் அவர் அறிவிலும் விடாமுயற்சியிலும் முன்னுதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டார். 


📖 நூல் / தஹ்தீபுத் தஹ்தீப் 

✍ ஆசிரியர் / இப்னு ஹஜர் 

✍ தமிழாக்கம் / imran farook


No comments

Powered by Blogger.