ஒரே பார்வையில் இன்றைய பட்ஜெட், முக்கிய சில குறிப்புக்கள்
வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
இலஞ்சம் வாங்குபவர்கள் அனைவரும் பயப்படும் சமூகத்தை உருவாக்குவோம்.
இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது. ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு. தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கே அதிகளவு தண்டனைகளை வழங்கியுள்ளார்.
வரி செலுத்தும் மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாங்கள் நியாயம் செய்கிறோம்.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களின் தினக்கூலியை 1,700 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
தனியார் துறையின் அடிப்படை ஊதிய உயர்வை ஏப்ரல் முதல் 27,000 ரூபாய் ஆகவும், அடுத்த ஜனவரி முதல் 30,000 ரூபாய் ஆகவும் அதிகரிக்க இணக்கம்
இந்த ஆண்டு சம்பள அதிகரிப்புக்கு 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
பொதுத்துறையில் அடிப்படை சம்பளம் திருத்தம் செய்யப்பட்டு ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. அரச சேவையின் அடிப்படை சம்பளம் 40000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.
கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக நூற்றெட்டு அலகுகள் கட்டப்படும். மிக விரைவில் கட்டப்படும்.
இலங்கை தினம்" என்ற தேசிய விழாவை நடத்துவதற்கான திட்டங்கள். அதற்காக, ரூ. 300 மில்லியன் ஒதுக்கப்படும்.
தூய்மையான இலங்கை திட்டத்துக்கு 5000 மில்லியன் ரூபாய்.
கிழக்கு மாகாணம் பொருளாதார அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும்.
பின்வரும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது:
(i) தோட்டப்புற வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 4,267 ரூபாய் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
(ii) மலையகம் தமிழ் இளைஞர்களின் தொழிற்பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2,450 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
(iii) மலையகம் தமிழ் சமூகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 866 ரூபாய் மில்
வடக்கில் பாலம், வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபாய்.
ஸ்ரீ லங்கா விமான நிறுவனத்தின் நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கன் நிறுவனத்தின் கடன் மற்றும் வட்டியை செலுத்த 2,0000 மில்லியன் ரூபாய்.
வாகன அனுமதிகள் வழங்கப்படாது, என்றும் இந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என்றும், அரசுக்குச் சொந்தமான அனைத்து சொகுசு வாகனங்களும் ஏலம் விடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்க 15000 மில்லியன் ரூபாய்.
வெளிநாடு சென்று திரும்பும் இலங்கையர்களுக்கு விமான நிலைய வரியில்லா வரம்பு உயர்த்தப்படும்.
பண்டிகை உணவுப் பொதிக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.250,000 லிருந்து ரூ.1 மில்லியனாக உயர்த்தப்படும்.
இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்ட ஒரு மில்லியன் ரூபாய்.
தடுப்பு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5,000.
அனாதைகளுக்கான சமூகப் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.
நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக ஐநூறு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 7,500-லிருந்து பத்தாயிரமாக உயர்த்தப்படும்.
காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை.
சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த உதவித்தொகை 7500 முதல் பத்தாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
முன்பள்ளி சிறுவர்களின் காலை உணவுக்காக செலவிடப்படும் பணம் 100 ரூபாய் வரை அதிகரிப்பு.
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக ஏழாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Post a Comment