Header Ads



அதிகாரி ஒருவருக்கு 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்


மொனராகலை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான விலைமனுக் கோரல் பணத்தை விடுவிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 56 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.


தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதற்கு மேலதிகமாக,  பிரதிவாதிக்கு 40,000/- ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்சமாகப் பெற்ற 36,000/- ரூபாவை அபராதமாக வசூலிக்க உத்தரவிட்டார்.


மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி ஒருவருக்கே 36,000/- ரூபாய் இலஞ்சம் பெற்றதற்காக இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.