Header Ads



ஜனாதிபதி 3 விமானங்களை பயன்படுத்தினரா..? உண்மை நிலவரம் என்ன..??


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு  ஒரு விளக்கத்தை வெளியிட்டது.


அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி இலங்கை விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது எனவும் பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் பயணத்திற்கு இலங்கை விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.