Header Ads



உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு, விற்பனைக்கு தயாரான 220 கிலோ காலாவதியான பேரீச்சம்பழம் பிபடிட்டது


புறக்கோட்டையில்  ஒரு கடையில் இருந்து விற்பனைக்கு தயாராக இருந்தபோது காலாவதியான பேரீச்சம் பழங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டன.


நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் சனிக்கிழமை (08)  நடத்தப்பட்ட சோதனையின் போது உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த  சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழம் கைப்பற்றப்பட்டதாக  நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அடுத்த வாரம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் அந்த வர்த்தகருக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது

No comments

Powered by Blogger.